ஊசி நூலில் ஒரு வாழ்வு
ஒரே ஒரு கருப்பு பேண்ட் தான் வைத்திருக்கிறேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு அதன் ஜிப் அறுந்து போய்விட்டது.நான் மிகவும் சோம்பேறி ஆகும் வாரங்களில்,துணி துவைக்காமல் போனால் கருப்பு பேண்ட் தான் கை கொடுக்கும்.இரண்டு மாதங்களாக சென்னையில் பல இடங்களில் தேடி வருகிறேன்.ஒருவர் கூட சில்லரை வணிகமாக தைப்பதை பார்க்க முடியவில்லை.உண்மையில் சில்லரை தையல்காரர்கள் இந்த நகரத்தில் இருக்கிறார்களா இல்லையா ?
இப்படியான இதே சூழ்நிலையை ஒத்தது சுய்தாகா.சுய்தாகா என்ற சொல்லுக்கு ஊசி - நூல் என்று பொருள்.தன் சொந்த அடையாளங்களை துறந்துவிட்டு பிழைப்பிற்காக நகரம் வந்த மௌஜியின் குடும்பம் தன் பரம்பரை தொழிலான நெசவை கையிலெடுத்து எப்படி தங்களை,தங்கள் அடையாளங்களை மீட்டெடுக்கிறார்கள் என நீள்கிறது படம்.
மௌஜி, தையல் மிஷன் விற்பனை செய்யும் பன்சால் கடையில் நாயாக வேலை பார்க்கிறான்.நாய் என்றால் நிஜமாக நாயாக.மிகுந்த விசுவாசத்துடன்.
Add caption
சொல்வதற்கெல்லாம் எல்லாம் வாலாட்டி காலடியில் சுற்றுபவனாக இருக்கிறான்.முதலாளி பன்சால் மகனின் திருமண விழாவில் அவனை நாயாக நடிக்க சொல்லி கேலிபடுத்துகிறார்கள். குடும்பத்தின் முன் அவமானப்பட்டு நிற்கிறான் மௌஜி.மம்தா தன் கணவனின் நிலையை குறித்து கவலை கொள்கிறாள்.அவனை சொந்த தொழில் செய்ய சொல்லி வற்புறுத்துகிறாள்.திருமணம் ஆன இரண்டு வருடங்களில் எதையுமே கேட்டிராத தன் மனைவிக்காக வேலையை விட்டுவிடுகிறான்.தானறிந்த தையல் தொழிலை மேற்கொள்ளலாகிறான்.அரசின் இலவசமாக கிடைக்கும் தையல் மிஷினிற்காக பல தொலைவு சைக்கிளிலே செல்கிறார்கள்.அதன்பின் ஏற்படும் சிறு சிறு தடைகளுக்கு பின் Raymond நிறுவனம் நடத்தும் வளர்ந்து வரும் பேஷன் ஷோ போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறுகிறார்கள் என்பதோடு படம் முடிகிறது.
ஒரு வகையில் ஃபேரி டேல் எனப்படும் திடீரென நிகழும் மாயஜாலம் போல கதை நகர்ந்தாலும், நகர்மயமாக்கலின் விளைவாக நலிந்து போன தையல் மற்றும் நெசவாளர்களின் வாழ்க்கை முறையை விவரிக்கிறது படம்.பெரிய பெரிய நிறுவனங்களின் வருகையால் சிறிய கலைஞர்கள் பாதிக்கபடுகிறார்கள் அந்த கலை எப்படி மெல்ல மெல்ல மறைந்து போகிறது என்பதற்கு இப்படம் உதாரணம்.
ஒரே ஒரு கருப்பு பேண்ட் தான் வைத்திருக்கிறேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு அதன் ஜிப் அறுந்து போய்விட்டது.நான் மிகவும் சோம்பேறி ஆகும் வாரங்களில்,துணி துவைக்காமல் போனால் கருப்பு பேண்ட் தான் கை கொடுக்கும்.இரண்டு மாதங்களாக சென்னையில் பல இடங்களில் தேடி வருகிறேன்.ஒருவர் கூட சில்லரை வணிகமாக தைப்பதை பார்க்க முடியவில்லை.உண்மையில் சில்லரை தையல்காரர்கள் இந்த நகரத்தில் இருக்கிறார்களா இல்லையா ?
இப்படியான இதே சூழ்நிலையை ஒத்தது சுய்தாகா.சுய்தாகா என்ற சொல்லுக்கு ஊசி - நூல் என்று பொருள்.தன் சொந்த அடையாளங்களை துறந்துவிட்டு பிழைப்பிற்காக நகரம் வந்த மௌஜியின் குடும்பம் தன் பரம்பரை தொழிலான நெசவை கையிலெடுத்து எப்படி தங்களை,தங்கள் அடையாளங்களை மீட்டெடுக்கிறார்கள் என நீள்கிறது படம்.
மௌஜி, தையல் மிஷன் விற்பனை செய்யும் பன்சால் கடையில் நாயாக வேலை பார்க்கிறான்.நாய் என்றால் நிஜமாக நாயாக.மிகுந்த விசுவாசத்துடன்.
![]() |
| Add caption |
ஒரு வகையில் ஃபேரி டேல் எனப்படும் திடீரென நிகழும் மாயஜாலம் போல கதை நகர்ந்தாலும், நகர்மயமாக்கலின் விளைவாக நலிந்து போன தையல் மற்றும் நெசவாளர்களின் வாழ்க்கை முறையை விவரிக்கிறது படம்.பெரிய பெரிய நிறுவனங்களின் வருகையால் சிறிய கலைஞர்கள் பாதிக்கபடுகிறார்கள் அந்த கலை எப்படி மெல்ல மெல்ல மறைந்து போகிறது என்பதற்கு இப்படம் உதாரணம்.

Comments
Post a Comment