ஜனநாயகத்திற்கு குரல் கொடுப்பாரா எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ?
உட்கட்சி பூசல்களால் அரசியல் களத்தில் வலுவிழந்துக் கொண்டிருக்கும் அதிமுகவின் முக்கிய சிக்கலாக மாறியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. 10 வருடமாக அதிமுக சேலம் புறநகர் மாவட்டச் செயலாளாராக இருந்துவந்த இபிஎஸ், கட்சியின் உயர்ந்த பதவியான இணை ஒருங்கிணைப்பாளரும் கூட. ஆனாலும் தன் மாவட்டச் செயலாளர் பதவியை விட்டுத்தர மறுத்து தனி ஆளாக வேட்புமனு தாக்கல் செய்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஆனால், இப்போது ஒரு பல்டி. மாவட்டச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து தனக்கு நெருக்கமான இளங்கோவனை அந்த அரியணையில் ஏற்றியிருக்கிறார் கரும்பு தேசத்தின் இரும்பு மனிதர் என்று புகழப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவில் மாவட்டச் செயலாளர் என்பது அதிமுகவிற்குள் அமைச்சர்களுக்கு இணையான பதவியாக கருதப்படுவதோடு, அப்பகுதியில் யார் எம்.எல்.ஏ., எம்.பி. வேட்பாளர்கள் என்பதை தீர்மானிப்பதிலும் முக்கிய பங்கு இருக்கிறது. அப்பகுதி கட்சி நிர்வாகிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைக்கவும், கட்சியில் பலத்தை வலிமைப்படுத்தவும் ஆயுதமாக பயன்படுகிறது மாவட்டச் செயலாளர் பதவி. சேலம் புறநகர் அதிமுக மாவட்டச் செயலாளராக 10 ஆண்டுகளாக இருந்தவர...



