தேன் குரல் கோசல்

 08 April 2020


யாரை கேட்டாலும் ஸ்ரேயா கோசல் என்கிறார்கள்.அவர் குரலை கேட்டிருக்கிறாயா ? தேன் போன்றது என்கிறார்கள்.சரி தேன் தான் போ என்றேன்.

எனக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே ஸ்ரேயா கோசல் தமிழ்பாடல்களில் அவ்வளவாக விருப்பம் இல்லை.அவரின் உச்சரிப்பு பிடிக்கவில்லை.அவ்வளவு தெளிவானாதாய் இல்லை என நினைத்து கொண்டிருந்தேன். விருமாண்டியில் உன்ன விட பாடலில் ச'வில் தொடங்கும் வார்த்தைகளில் நா சொதப்பாத உச்சரிப்பு இருக்கும்.
" என்ன சரிவர புரிஞ்சிக்க ஆரும் இல்ல "
இதில் வரும் சரி என்பது sari என்பதல்ல.அதன் உச்சரிப்பு Chari என வரும்.அதில் ஒரு கிராமத்து பெண்ணின் பேச்சு நடை இருக்கும்.
அடுத்து,
" சாட்சி சொல்ல சந்திரன் வருவான்டி " வரியில் சாச்சி என்று வருகிற மாதிரி இருந்தாலும் அந்த ட் மெல்லிசாக கேட்கும்.அதே போல் சந்திரன்ங்குற வார்த்தையும் ச்சந்திரன்னு வரும்.அந்த ச உச்சரிப்பு பிடித்திருந்தது.
ஆனால் பாருங்கள்.பாடல் இன்னும் முடியவில்லை.முதல் சரணம் முடிய போகிறது.
*யாரு சொல்லி தந்து வந்தது
காணா கனா வந்து கொல்லுது
இதுக்கு பேரு தான் "மோஷமா மோஷமா"
இதுக்கு பேரு தான் மோட்சமானு படிச்சிருக்கலாம்.மோஷம் என்று சொல்லி பாடலையே மோசப்
படுத்திவிட்டார்.என்ன இருந்தாலும் அவர் வடமாநிலத்து பெண் தானே.ஷ சகஜமாக நாக்கில் வந்துவிட்டது போல.
பிகு : சிக்கினி சம்மிலி பாடலுக்கு மட்டும் குற்றம் குறைகள் தளர்த்தப்படுகிறது.

Comments