திமுகவிற்கு யார் எதிர்க்கட்சி ?
2021 சட்டப்பேரவை தேர்தலுக்குப்பின் திமுக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பேசிய இந்த வார்த்தைகள், திமுகவின் பலத்தை தமிழ்நாட்டில் நிரூபிக்க வேண்டியதற்கான அவசியத்தை தொண்டர்களுக்கு வலியுறுத்தியது. சட்டப்பேரவை தேர்தலில் திமுக தனிப்பெருன்பான்மயுடன் வெற்றி பெற்றாலும், ஸ்டாலின் எதிர்பார்த்த வெற்றி அதுவல்ல. அதற்கும் மேல்.
2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 90 சதவீததிற்கும் அதிகமான வெற்றியுடன் 38 இடங்களில் வெற்றியை பிடித்தது. 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் இதே வெற்றியை எதிர்பார்த்திருந்த திமுக, சிறிது தடுமாறியது. 90 சதவீத வெற்றியை எதிர்பார்த்த திமுகவை 65 சதவீத வெற்றியோடு மக்கள் சட்டப்பேரவைக்கு அனுப்பி வைத்தார்கள். எதிர்பார்த்த வெற்றியை அடையாத காரணத்தினால், முதலமைச்சர் ஸ்டாலின், உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத வெற்றியை திமுக அடைய இந்த உழைப்பு போதாது என்று தொண்டர்களுக்கு இட்ட கட்டளை இது.
தொண்டர்கள் கட்டளை நிறைவேற்றினார்களா என்றால் இல்லை. ஆனால், கட்சிக்கு முன்னேற்றம் கிடைத்தது. உள்ளாட்சித் தேர்தலில் பெருவாரியான இடங்களுடன் திமுக 90 சதவீத வெற்றியை பெற்றது. 3 ஆண்டுகளில் நடந்த 3 தேர்தல்களும், திமுகவின் நேரடி போட்டியான அதிமுகவை நிலைகுழையச் செய்திருக்கிறது.
60 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசியல், காமராஜர் - அண்ணா, கருணாநிதி - எம்.ஜி.ஆர், ஜெயலிலதா - கருணாநிதி என்று எப்போதும் இரு துருவங்களை சார்ந்தே இயங்கி வந்திருக்கிறது. கருணாநிதிக்கு பின் திமுகவை ஆளப்போவது யார் என்ற கேள்வி வந்த போது, அதற்கு விடையாக இருந்தவர் ஸ்டாலின். நிர்வாகத்திறன் அற்ற தலைவர் என்றும், ஸ்டாலின் தலைமைக்கு பின்பு திமுக காணாமல் போய்விடும் என்று விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் உண்மையில் காணாமல் போய்க்கொண்டிருப்பது அதிமுக. தல யார் ? தளபதி யார் என்று கட்சிக்குள் எழுந்த பிரச்சனை; அதிமுகவை பொம்மையாக்கி தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுக்க திட்டமிடும் பாஜக ; அதிமுக மீண்டும் பிளவை சந்திக்க இருப்பதற்கான சாத்தியங்கள் என்று நாட்டிற்குள் பேசப்பட வேண்டிய விசயங்கள் ஆகின.
தான் உயிருடன் இருக்கும் வரை, அடுத்தகட்ட தலைவரை ஜெயலலிதா அடையாளம் காட்டாதது தற்போதைய அதிமுகவின் நிலைக்கு வழிவகுத்தது. அவரது இறப்பிற்குப்பின், ஓபிஎஸ், ஈபிஎஸ் என்ற இரு அணிகள் ஜெ அணியையும், ஜா அணியையும் நினைவுபடுத்தின. இபிஎஸ் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மக்களை விட்டு அதிமுக விலகிச் செல்ல தொடங்கியது. அதிமுக அரசின் செயல்பாடுகள், பாஜகவுடன் கூட்டணி, செல்வாக்கு இல்லாத தலைவர் என அதிமுக ஒருபுறம் சரிந்து கொண்டிருக்க, அப்போதைய எதிர்க்கட்சியான திமுக அசுர வளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்தது. அதிமுகவில் எழுந்த பல்வேறு குழப்பங்களுக்கு தீர்வாக அமைச்சர் பழனிச்சாமி முதல் அமைச்சர் பழனிச்சாமி என்று ஆன போதும் முதலமைச்சர் ஆன அதே நேரத்தில், அதற்குப் பின் வந்த ஒவ்வொரு தேர்தலிலும், திமுக அபார வெற்றியையும், அதிமுக தொடர் சரிவையும் சந்தித்தது.
அதிமுகவின் உட்கட்சி பூசல், பாஜகவுடன் கூட்டணி, செயல்திட்டங்களின் தோல்வி, செல்வாக்கு அற்ற தலைவர் என்று அதிமுக சந்தித்த அத்தனை சலசலப்புகளும் திமுகவின் வெற்றிக்கு கைகொடுத்து நின்றது.
2014 அதிமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா கண்ணுக்கெட்டிய தூரம்வரை அதிமுகவிற்கு எதிரிகளே இல்லை என்றார். உடல்நலக் குறைவால், கருணாநிதி நேரடி அரசியலில் இல்லாத அந்த நேரத்தில் ஸ்டாலினை மனதில் வைத்து ஜெயலலிதா இந்த வார்த்தைகளை பேசியதாக அப்போது விமர்சனங்கள் எழுந்தன.
7 வருடங்களுக்கு முன்பாக, ஜெயலலிதா கூறிய இந்த வார்த்தைகளை விட ஒரு படி மேலேறி, எதிர்க்கட்சியே இல்லை என இறுமாப்பு கொள்ளாமல், மனசாட்சியே எதிர்க்கட்சி என செயல்படுவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதுள்ளார். தோல்வியில் துவண்டு போவதை விட வெற்றியில் ஊறிக்கிடப்பது ஆபத்தானது என்று முதலமைச்சருக்கு உதித்திருக்கலாம்.
எதிர்க்கட்சியே இல்லை என்று அதிமுகவை விமர்சித்திருக்கும் இதே நேரத்தில் தான், அதிமுக 3 வித அணிகளுடன் தனது பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைத்திப்பதை தமிழ்நாடு ’’ பார்த்துக்’’ கொண்டிருக்கிறது.


Comments
Post a Comment